இன்று வானில் பல்வேறு இடங்களில் அழகாக தெரிந்த சூரிய கிரகணத்தின் காட்சிகள்; அடுத்து இனி எப்போது வரும்?

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் தோன்றிய சூரிய கிரகணத்தின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்க்கோட்டில் வரும்போதோ அல்லது நேர் உள்ளமைப்பில் வரும் போதும், சூரியன் மற்றும் பூமிக்கு இடையே சந்திரன் வரும்போதும், சூரியனின் கதிர்கள் பூமியை மறைக்கும் நிகழ்வே, சூரிய கிரகணம் என்று அழைக்கின்றோம்.

சூரிய கிரகணங்கள் அதன் நிலையை பொறுத்து பகுதி, முழு மற்றும் அரிய சூரிய கிரகணம் என்று 3 வகைகளாக பிரிக்கிறோம்.

இன்று நிகழ உள்ள சூரிய கிரகணம், முழு அல்லது வளைவு சூரிய கிரகணம் ஆகும். இன்று, சூரியனின் கதிர்கள் முழுமையாக பூமியை மறைத்து, சூரியனை சுற்றி, ஒரு முழு வளையமாக தெரியும்.

இந்த சூரிய கிரகணம் காலை 9.15 மணிக்கு துவங்கி மாலை 3.04 மணி வரை நீடிக்கும். பகல் 12.10 மணியளவில் உச்சபட்ச சூரியகிரகணம் நிகழ உள்ளது.குஜராத் மாநிலம் காந்திநகரில் தெரிந்த சூரிய கிரகணம் 

இந்த சூரிய கிரகணம், ஆசியா, ஆப்ரீக்கா, பசிபிக், இந்திய பெருங்கடல், ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியாவின் பலபகுதிகளில் தெளிவாக தெரியும்.

துபாயில் தெரிந்த சூரிய கிரகணம் 

அந்த வகையில், இந்தியாவின் குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் காலை 9.58 மணியளவில் கிரகணம் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

டெல்லியில் தெரிந்த சூரிய கிரகணம் 

மதியம் 2.29 மணியளவில், கிரகணம் நிறைவடையும். இந்த கிரகணத்தை நேரடியாக பார்க்கக்கூடாது. பார்த்தால் கண்ணில் கருவளையம் பாதிக்கப்படும். எனவே, தகுந்த பாதுகாப்பு முறைகளை கொண்டு சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் தெரிந்த சூரிய கிரகணம் 

மேலும், பல்வேறு நகரங்களில் எடுக்கப்பட்ட சூரியகிரகணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் தெரிந்த சூரிய கிரகணம்

0/Post a Comment/Comments

Previous Post Next Post