உயிர்த்த ஞாயிறு தாக்குலின் பின் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்; ஐ.நா விசேட அறிக்கையாளர்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குல்களை தொடர்ந்து இலங்கையில் கண்காணிப்புக்கள் அதிகரித்ததாக ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த அமைதியான சபை மற்றும் சம்மேளன சுதந்திர உரிமைகளுக்கான விசேட அறிக்கையாளர் - க்ளேமென்ட் யாலெட்சொசி வோல் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை வடக்கு - கிழக்கில் பல உயிர்களை காவுகொண்ட போர் முடிந்துள்ளபோதும் அங்கு இன்னமும் பாரிய இராணுவ பிரசன்னம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக அரசாங்கத்தின் சுதந்திரமான பணிப்பின்கீழ் வடக்கிழக்கில் தொடர்ந்தும் கண்காணிப்பு கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்புக்களை தாம் தீவிர கரிசனைக்கு உட்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி கண்காணிப்புக்கள், வீடுகளுக்கு மற்றும் அலுவலகங்களுக்கு சென்று மேற்கொள்ளப்படும் கண்காணிப்புக்கள் என்பன நாட்டின் புலனாய்வுப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன.

போராட்டங்கள் கூட கண்காணிக்கப்படுகின்றன. போராட்டங்களுக்கு முன்னதாக அச்சுறுத்தல்களும் தொந்தரவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரச சார்பற்ற அமைப்புக்களின் படைத்தரப்பின் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றன.

தமது கிடைத்த தகவலின்படி ஒரு அரச சார்பற்ற அமைப்பின் அலுவலகத்துக்கு இரண்டு மாதக்காலப்பகுதியில் 6 தடவைகளாக குற்றப்புலனாய்வு பிரிவினர் சென்று விசாரணைகளை நடத்தியுள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சென்றிருந்தபோது தமது வாகனத்தின் இலக்கமும் படைத்தரப்பினரால் கண்காணிக்கப்பட்டதாக சிறப்பு அறிக்கையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான கண்காணிப்புக்கள் தொந்தரவுகள் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்குவதுடன் சுயதணிக்கைக்கும் வழியேற்படுத்துவதாக ஐக்கிய நாடுகளின் அமைதியான சபை மற்றும் சம்மேளன சுதந்திர உரிமைகளுக்கான விசேட அறிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post