UNSC யின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா!!

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் இரண்டு வருடங்களுக்கான நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தெரிவாகியுள்ளது.

நேற்று மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் போது 193 உறுப்பினர்களில் 184 உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதேவேளை அயர்லாந்து, மெக்சிக்கோ, நோர்வே ஆகிய நாடுகளும் இரண்டு வருடங்களுக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவை பொறுத்தவரை அது ஆசிய பசுபிக் தரப்பில் இருந்து 2021022 ஆண்டுக்காக போட்டியிட்டது.

இந்தியாவின் வேட்பாளர் நிலை கடந்த ஜூனில் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உட்பட்ட ஆசிய பசுபிக் குழுவின் 55 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post